ஆட்டோ கட்டணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை நுகர்வோர் குரல் என்ற அமைப்பின் செயலாளர் என்.லோகு என்பவர், கோவையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆட்டோ கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வது, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 8 விதிமுறைகளை உருவாக்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைந்துள்ளதால், ஆட்டோ கட்டணத்தையும் குறைக்கவேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணும் பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விழுப்புரம், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 595 புகார்கள் வந்துள்ளன. அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணத்தை 2014-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்டோ மீட்டரில் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று இந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எரிபொருள் விலைக்கு ஏற்ப மட்டும் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க முடியாது. எரிபொருள் விலை, டிரைவர் சம்பளம், வாகனம் பராமரிப்பு செலவு, டயர்கள் மாற்றியமைக்கும் செலவு, ஆட்டோவின் விலை, ஆட்டோவை வாங்கி வாடகைக்குவிடும் உரிமையாளருக்கு கிடைக்கவேண்டிய லாபம் ஆகியவற்றை கணக்கில்கொள்ள வேண்டியதுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப நிலுவையில் உள்ள ஆட்டோ கட்டணத்தில் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரையில் மட்டுமே வித்தியாசம் ஏற்படும். எனவே, எரிபொருள் விலையின் அடிப்படையில் மட்டும் தற்போது ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க இயலாது" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை ஏப்ரல் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "ஆட்டோ கட்டணம் தொடர்பாக பலமுறை பரிந்துரைத்தும் அரசு செயல்படுத்தவில்லை. போக்குவரத்து ஆணையர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆட்டோவில் சென்றால்தான் மக்களின் சிரமம் புரியும்" என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.