Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

சிக்கும் செந்தில் பாலாஜி, அலறும் அக்ரி, பதறும் பழனியப்பன்...! -கண்டுகொள்ளாத கார்டன்சொந்த தொகுதிக்குள் தலைகாட்ட முடியாத அளவுக்கு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் மீது கை வைக்கும் அளவுக்கு அத்துமீறல்கள் நடப்பதால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் மாண்புமிகுக்கள். 'அடுத்த முதல்வர்?' என்ற அடைமொழியோடு வலம் வந்த செந்தில் பாலாஜிக்கு இந்தத் தேர்தல் ரொம்பவே சோதனையாக முடியப்போகிறது. கடந்தமுறை கரூர் தொகுதியில் போட்டியிட்டவர், இந்தமுறை தி.மு.கவின் கே.சி.பழனிச்சாமியோடு அரவக்குறிச்சி தொகுதியில் மோதுகிறார். ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் முட்டல் மோதல்கள் இருந்து வந்தன. செந்தில்பாலாஜி அமைச்சரான பிறகு, கே.சி.பியோடு ரொம்பவே ராசியாகிவிட்டார். குறிப்பாக, பொருளாதார ரீதியாக செந்தில்பாலாஜி உச்சத்திற்குப் போனதற்குக் காரணமே கே.சி.பிதான் என்கின்றனர். இவர்களின் வணிகத் தொடர்புகளால் அதிர்ந்து போன ஜெயலலிதா, இருவரையும் நேருக்கு நேர் மோத வைத்திருக்கிறார். சிட்டிங் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறவே கே.சி.பி விரும்புகிறார். இதனால், தேர்தல் வேலைகளில் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேரத்தில் செய்த சில தகிடுதத்தங்கள், தற்போது வீதிக்கு வர ஆரம்பிவித்துவிட்டன. நேற்று நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் தொடுத்த வழக்கு, செந்தில் பாலாஜிக்கு கூடுதல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. ' அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவுகளுக்கு நான் உள்பட பலர் விண்ணப்பித்தோம். இதில், ஓட்டுநர் உள்ளிட்ட பதவிக்கு மூன்று லட்சமும், என்ஜினியர் பதவிக்கு 6 லட்சமும் கேட்டார் அமைச்சர். இதை உண்மை என்று நம்பி, 107 பேர் ஒன்று சேர்ந்து இரண்டே கால் கோடி ரூபாயைக் கொடுத்தோம். அமைச்சரின் சகோதரர் அசோகன்தான் பணம் வாங்கி அமைச்சரிடம் கொடுத்தார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதும் மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார் செந்தில்பாலாஜி' எனக் கூறி வழக்கத்தைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. விரைவில் வழக்கின் விசாரணை நடக்க இருக்கிறது. 'தேர்தல் நெருக்கத்தில் இந்த வழக்கு செந்தில் பாலாஜிக்கு கூடுதல் நெருக்கடியைத் தரும்' என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில். தருமபுரி மாவட்டத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த கட்சிக்காரர்களிடம் அவர் பேசும்போது, " நாடாளுமன்றத் தேர்தல்ல குறிப்பிட்ட சாதி ஓட்டுக்கள் கிடைக்காததாலதான் தோல்வியைத் தழுவினோம். இந்தமுறை சரியா ஓட்டுப் போடுங்க" என ஒருமையில் பேச ஆரம்பித்தார் பழனியப்பன். இதைக் கண்டு ஆத்திரமான ஒரு கூட்டம், "உன் ஆட்டம் எல்லாம் இனி செல்லாது. அமைச்சர் ஆகறதுக்கு முன்னாடி எவ்வளவு சொத்து உனக்கிருந்துச்சு. இப்ப எவ்வளவு இருக்கு? அதையெல்லாம் வெளிப்படையா சொல்லு. பெரிசா அட்வைஸ் பண்ண வந்துட்டே" எனக் கொந்தளிக்க, ஆத்திரமான பழனியப்பன், "யாருடா நீங்க எல்லாம்...? டி.ஆர்.அன்பழகன் ஏவிவிட்டு வந்து பேசறீங்களா? வாங்கடா வந்து அடிங்கடா பார்க்கலாம்" எனக் கருவ, அமைச்சர் மீதே பாய்ந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதையடுத்து, தருமபுரி தொகுதிக்குள் தேர்தல் வேலை பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பழனியப்பன். 'எங்கே அடிவிழுமோ?' என்ற அச்சத்தோடுதான் நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறார். இதைவிட, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அ.தி.மு.க தலைமை கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் யாரும் எதிர்பாராதது. அக்ரியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அ.தி.மு.க அரசு. 'இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு' அக்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி. 'இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தொடர்புகளுக்கு போதிய ஆதாரம் இல்லை' என்றுகூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போன அ.தி.மு.க அரசு, 'வழக்கில் போதுமான ஆதாரங்கள் அக்ரிக்கு எதிராக இருந்தபோதிலும், வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்ததை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில் முத்துக்குமாரசாமி மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காத அளவுக்கு செயல்பட வேண்டும் என விரும்புகிறார் ஜெயலலிதா. அதனால்தான் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். தேர்தல் நெருக்கத்தில் தங்ககளுக்கு இன்னும் என்னென்ன அதிர்ச்சி வைத்தியங்களை வைத்திருக்கிறாரோ ஜெயலலிதா எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.


சொந்த தொகுதிக்குள் தலைகாட்ட முடியாத அளவுக்கு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் மீது கை வைக்கும் அளவுக்கு அத்துமீறல்கள் நடப்பதால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.   'அடுத்த முதல்வர்?' என்ற அடைமொழியோடு வலம் வந்த செந்தில் பாலாஜிக்கு இந்தத் தேர்தல் ரொம்பவே சோதனையாக முடியப்போகிறது. கடந்தமுறை கரூர் தொகுதியில் போட்டியிட்டவர், இந்தமுறை தி.மு.கவின் கே.சி.பழனிச்சாமியோடு அரவக்குறிச்சி தொகுதியில் மோதுகிறார். ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் முட்டல் மோதல்கள் இருந்து வந்தன. செந்தில்பாலாஜி அமைச்சரான பிறகு, கே.சி.பியோடு ரொம்பவே ராசியாகிவிட்டார். குறிப்பாக, பொருளாதார ரீதியாக செந்தில்பாலாஜி உச்சத்திற்குப் போனதற்குக் காரணமே கே.சி.பிதான் என்கின்றனர். இவர்களின் வணிகத் தொடர்புகளால் அதிர்ந்து போன ஜெயலலிதா, இருவரையும் நேருக்கு நேர் மோத வைத்திருக்கிறார். சிட்டிங் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறவே கே.சி.பி விரும்புகிறார். இதனால், தேர்தல் வேலைகளில் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் செந்தில் பாலாஜி.   இந்நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேரத்தில் செய்த சில தகிடுதத்தங்கள்,  தற்போது வீதிக்கு வர ஆரம்பிவித்துவிட்டன. நேற்று நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் தொடுத்த வழக்கு, செந்தில் பாலாஜிக்கு கூடுதல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. ' அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவுகளுக்கு நான் உள்பட பலர் விண்ணப்பித்தோம். இதில், ஓட்டுநர் உள்ளிட்ட பதவிக்கு மூன்று லட்சமும், என்ஜினியர் பதவிக்கு 6 லட்சமும் கேட்டார் அமைச்சர். இதை உண்மை என்று நம்பி, 107 பேர் ஒன்று சேர்ந்து இரண்டே கால் கோடி ரூபாயைக் கொடுத்தோம். அமைச்சரின் சகோதரர் அசோகன்தான் பணம் வாங்கி அமைச்சரிடம் கொடுத்தார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதும் மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார் செந்தில்பாலாஜி' எனக் கூறி வழக்கத்தைத் தாக்கல் செய்திருக்கிறார்.  இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. விரைவில் வழக்கின் விசாரணை நடக்க இருக்கிறது. 'தேர்தல் நெருக்கத்தில் இந்த வழக்கு செந்தில் பாலாஜிக்கு கூடுதல் நெருக்கடியைத் தரும்' என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்.   தருமபுரி மாவட்டத்தில்,  உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த கட்சிக்காரர்களிடம் அவர் பேசும்போது, " நாடாளுமன்றத் தேர்தல்ல குறிப்பிட்ட சாதி ஓட்டுக்கள் கிடைக்காததாலதான் தோல்வியைத் தழுவினோம். இந்தமுறை சரியா ஓட்டுப் போடுங்க" என ஒருமையில் பேச ஆரம்பித்தார் பழனியப்பன். இதைக் கண்டு ஆத்திரமான ஒரு கூட்டம், "உன் ஆட்டம் எல்லாம் இனி செல்லாது. அமைச்சர் ஆகறதுக்கு முன்னாடி எவ்வளவு சொத்து உனக்கிருந்துச்சு. இப்ப எவ்வளவு இருக்கு? அதையெல்லாம் வெளிப்படையா சொல்லு. பெரிசா அட்வைஸ் பண்ண வந்துட்டே" எனக் கொந்தளிக்க, ஆத்திரமான பழனியப்பன், "யாருடா நீங்க எல்லாம்...? டி.ஆர்.அன்பழகன் ஏவிவிட்டு வந்து பேசறீங்களா? வாங்கடா வந்து அடிங்கடா பார்க்கலாம்" எனக் கருவ, அமைச்சர் மீதே பாய்ந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதையடுத்து, தருமபுரி தொகுதிக்குள் தேர்தல் வேலை பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பழனியப்பன். 'எங்கே அடிவிழுமோ?' என்ற அச்சத்தோடுதான் நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்.   இதைவிட, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அ.தி.மு.க தலைமை கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் யாரும் எதிர்பாராதது. அக்ரியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அ.தி.மு.க அரசு. 'இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு' அக்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி. 'இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தொடர்புகளுக்கு போதிய ஆதாரம் இல்லை' என்றுகூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போன அ.தி.மு.க அரசு, 'வழக்கில் போதுமான ஆதாரங்கள் அக்ரிக்கு எதிராக இருந்தபோதிலும், வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்ததை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில் முத்துக்குமாரசாமி மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காத அளவுக்கு செயல்பட வேண்டும் என விரும்புகிறார் ஜெயலலிதா. அதனால்தான் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்.   தேர்தல் நெருக்கத்தில் தங்ககளுக்கு இன்னும் என்னென்ன அதிர்ச்சி வைத்தியங்களை வைத்திருக்கிறாரோ ஜெயலலிதா எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.