அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் ஐந்தாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முறை வேப்பனப்பள்ளி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை, பென்னாகரத்திற்கு மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இதுவரை நடந்த மாற்றங்கள் எதற்காக என்று கணிக்க முடியவில்லையென்றாலும், கே.பி.முனுசாமியின் மாற்றம் அன்புமணிக்காக என்று சொல்லப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி வெற்றி பெற்றதை இன்னமும் ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது விட்டதால்தான் இப்போது முதல்வர் வேட்பாளர் அளவுக்கு வளர்ந்து நம்மை சரமாரியாக விமர்சிக்கிறார். எப்படியும் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறாராம் ஜெயலலிதா.
அன்புமணி தருமபுரியில் போட்டியிடப் போகிறார் என்று ஆரம்பத்தில் கசிந்த தகவலை அடிப்படையாக வைத்துதான், தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு பா.ம.க.வில் பல பொறுப்புகளை வகித்து, பின்னர் அ.தி.மு.க.வுக்கு வந்த பு.தா.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தார் என்றும் சொன்னார்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அன்புமணி தருமபுரி மாவட்டத்தை விடாமல் சுற்றி வருகிறார். கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியாகத்தான் இருப்பார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரத்திலும், தருமபுரியிலும்தான் பா.ம.க.வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. அதனடிப்படையில் அன்புமணி போட்டியிடுவதற்கு சாதகமான தொகுதிகளாக பென்னாகரத்தையும், தருமபுரியையும் தேர்வு செய்து வைத்திருக்கிறதாம் பா.ம.க. அதில் முதல் சாய்ஸ் பென்னாகரம்தான். என்கிறார்கள்.
தருமபுரியை மட்டுமே கணக்கில் கொண்டு காய் நகர்த்திய ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் ரிப்போர்ட் போயிருக்கிறது. அதனால்தான் கே.பி.முனுசாமி பென்னாகரத்திற்கு மாற்றம் என்கிறார்கள். தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதிலிருந்தே மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.பி.முனுசாமி. தருமபுரி, கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்ட கடைக்கோடி கிராமத்திற்கும் பரிச்சயமான முகம். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அன்புமணி பென்னாகரத்தில் போட்டியிட்டால் அவருக்கான டஃப் கே.பி.முனுசாமியால் மட்டுமே கொடுக்க முடியும் என்றுதான் முன்பு அறிவிக்கப்பட்ட வேலுமணியை நீக்கிவிட்டு, கே.பி.முனுசாமியை அறிவித்திருக்கிறார்கள் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.
இது குறித்து பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணனிடம் கேட்டோம். "உளவுத்துறை மூலமாக ரிப்போர்ட் அனுப்பப்பட்டுத்தான் இந்த மாற்றம் நடந்திருக்கும். கே.பி.முனுசாமியெல்லாம் அன்புமணிக்கு போட்டியா..? ஜெயலலிதாவே நின்னாக்கூட ஜெயிக்க முடியாது. இடைத்தேர்தல்ல டெபாசிட் இழந்தாங்களே மறந்துட்டாங்களா..." என்கிறார் கேஷுவலாக.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.