Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

தே.மு.தி.க.,வில் அழகிரி? விஜயகாந்த் கருத்தால் சர்ச்சை


தி.மு.க.,வில், தென்மண்டல அமைப்பு செயலராக இருந்த அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவரை கட்சியில் சேர்க்கும் முயற்சிகளுக்கு, அவரது தம்பி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
நீண்ட நாட்களுக்கு பின், சமீபத்தில், தி.மு.க., தலைவரும், தன் தந்தையுமான கருணாநிதியை, சென்னையில் சந்தித்தார் அழகிரி. அதன் பின், விரைவில் இணைப்பு நடக்கும் என்ற பேச்சு தீவிரமடைந்தது.

ஆனால், ஸ்டாலின் எதிர்ப்பு காரணமாக, அழகிரி இணைப்பு மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் நேற்று காலை, ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில், ஸ்டாலின் மற்றும் அழகிரி புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

படங்களுக்கு கீழே, 'தி.மு.க.,வில், அழகிரி இணைவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு; தே.மு.தி.க.,வில் இணைகிறார் அழகிரி' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. விஜயகாந்தின் கருத்தை, தே.மு.தி.க.,வினர், தங்களது நண்பர்களுக்கு அனுப்பி, வேகமாக பரப்பினர். 'தன் கட்சியினர் வெளியேற்றத்தை தடுப்பதற்காக, தே.மு.தி.க.,வில் அழகிரி இணைகிறார் என்ற கருத்தை, விஜயகாந்த் பரப்பியிருக்கலாம்' என, தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.