Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!


அதிமுக சார்பில் தமிழகம் முழுக்க பல்வேறு சர்ச்சைகளுடன் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்துவரும் நிலையில்,அக்கட்சியின் அதிகாரப்பூர்வ 'ட்விட்டர்' சமூக வலைத்தளத்தில் போட்டோ தில்லுமுல்லு  நடந்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதப்பொருளாகியிருக்கிறது.

தமிழகம் முழுக்க சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர்,  யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரம்  செய்துவருகின்றனர். திமுக, அதிமுக, தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி,பாஜக கூட்டணி,பாமக என்று அனைத்துக்கட்சிகளும் பிரத்யேக ஐ.டி. டீம் ஏற்பாடு செய்து,  இரவுபகலாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றன. அத்தோடு வாட்ஸ் அப் பிரசாரமும்,செல்போன் அழைப்பு பிரசாரமும் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில்,இரு நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் இயங்கிவரும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு, கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகளை  பட்டியலிட்டு 'போட்டோ ஷாப்' படங்களை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர்.



அதில் ஒரு படத்தில்  தமிழக விவசாயிகள் கடந்த 2006-2011 ஆண்டுகளில் நடந்த  திமுக  ஆட்சியில், எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தனர் என்றும், தற்போதைய அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பெற்றுள்ள பலன்கள் ஏராளம் என்றும் ஆங்கில வாசகங்கள் உள்ள போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் புகைப்படம் வேறு ஒரு ஆங்கில இதழில் வெளிவந்த புகைப்படம் என்றும், அது  வேற்று மாநில விவசாயிகள் இருக்கும் புகைப்படம் என்றும் ஆதாரங்களோடு பதிவிட்டு இணையதளவாசிகள்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.                          

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.