Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

மானாமதுரை அருகே அதிமுக கிளை செயலர் வெட்டிப்படுகொலை


முன்விரோத தகராறில் மானாமதுரை அருகே அதிமுக கிளை செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வைரவன்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (55). கல்லுப்பட்டி அதிமுக கிளை செயலாளர். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் பாண்டி. இருவரும் மாடு வளர்த்து வருகின்றனர். பொது இடத்தில் மாடுகளை கட்டுவது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி, அவரது மகன் விஜய் ஆகியோர் கதிரேசனை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற கதிரேசனின் மனைவி சீதாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

படுகாயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசன் இறந்தார். சீதா சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியின் உறவினர்கள் 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, அவரது மகன் விஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.