தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக தஞ்சை மாவட்டத்தில் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் களுக்கு அம்மா கைப்பேசி வழங்கப்பட்டு வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுகவினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்களான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அம்மை கைப்பேசி ஒவ்வொரு ஒன்றிய அலுவலகத்திலிருந்து மகளர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், “தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில் முதலமைச்சரின் படம் போட்ட செல்போன் வழங்கப்பட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு 10 ஆயிரம் அல்லது 20ஆயிரம் அரசு சார்பில் கடனுதவி வழங்கப்படும். அதை கண்காணிப்பவர்கள்தான் மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள். இவர்களுக்கு லாவா கம்பெனி செல்போனை 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் என்று சொல்லி ஒவ்வொரு ஒன்றிய அலுவலகத்திலிருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மகளிர் திட்ட அலுவலர் மூலம் ஒவ்வொரு ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு ஒன்றிய அலுவலகத்திலிருந்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டு வந்து பெற்று செல்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். செல்போன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இவர்கள் மூலம் அவர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கும் திட்டம் வைத்திருக்கிறார்கள் அதிமுகவினர்.
அங்கன்வாடி, சத்துணவுக்கூடத்திற்கு தேவையான பாத்திரங்களை தற்போது விநியோகம் செய்து வருகிறார்கள். இதுவும் அந்த துறையின் அதிகாரிகள் மூலம் தேர்தல் விதிமுறைகளுக்க மாறாக சட்டவிரோதமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆவின் பால் முகவர்களை அழைத்து கூட்டமும் நடத்தி, அவர்களுக்கு தேவையான கடன் மற்றும் தீவனக் கடன்களை வழங்கி வருகிறார்கள் அதிமுகவினர். இதெல்லாம் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் ஆனால் தேர்தல் கமிஸன் இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது“ என்கின்றனர்.
இவ்வளவு பட்டவர்த்தனமாக படமும் பெயரும் அச்சிட்டு செல்போன் கொடுப்பதை கண்டுகொள்ளாத தேர்தல் கமிஷன், ஆளும்கட்சிக்கு இன்னும் என்னென்ன சாதகங்களை செய்து தருமோ என்றனர் திமுகவினர்.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.