பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை: மத்திய அரசு எச்சரிக்கைaஆதார் அடையாள அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் பிரதி எடுத்து கொடுக்கும் இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் குடிமக் களுக்கு ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை பிளாஸ்டிக் கார்டுகளில் பிரதி எடுத்து கொடுக்கும் சேவையை இணையதள நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், இ-பே ஆகியவை தொடங்கியுள்ளன. இதற்காக ரூ.50 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்து பிளாஸ்டிக் கார்டுகளில் பிரதி எடுத்து கொடுப்பதை இந்நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என யுஐடிஏஐ உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிமீறி பிரதி எடுத்து கொடுக்கும் சேவையை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதே சமயம் சாதாரண தாளில், வண்ணப் பிரதி எடுத்தாலும் கறுப்பு வெள்ளை பிரதி எடுத்தாலும் அந்த ஆதார் அடையாள அட்டை செல்லுபடியாகும் என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் ஆதார் அடையாள அட்டையை பெற விரும்புவோர் அதற்கான அங்கீகாரம் பெற்ற மையங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சேவைக்காக வெறும் ரூ.30 மட்டும் செலுத்தினால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒருவேளை ஆதார் அடையாள அட்டை தொலைந்து போனால், இணையதளம் மூலம் அதை மறுபிரதி எடுத்துக் கொள்ளலாம் என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.