ம.தி.மு.க. தொண்டரின் காரில் இருந்த கொடியை அகற்றச் சொன்னதால், வைகோ-திருமாவளவன், தொண்டர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் கொடி
ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் கழக குமார். இவர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் விழா முடிந்ததும், அண்ணாசாலை வழியாக காரில் இரவு 11.30 மணி அளவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, சேப்பாக்கம் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பழனி, அந்த வழியாக வந்த கழக குமாரின் காரை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் காரில் முன்பு கட்டப்பட்டிருந்த கட்சி கொடியை கழற்றிவிட்டு செல்லும் படி கூறி உள்ளார்.
அதற்கு அவர் மறுத்ததால், முறையாக அனுமதி பெற்றுவிட்டு காரில் கட்சி கொடி கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் ஸ்பென்சர் எதிரில் உள்ள அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
வைகோ, தொல்.திருமாவளவன்
அதிகாரி பழனி, ‘தன்னை தேர்தல் பணி செய்யவிடவில்லை’ என்று போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் கழக குமாரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்துக்கு சுமார் 100 தொண்டர்களுடன் வந்தனர்.
தேர்தல் விதி
இதுகுறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த கட்சியாக இருந்தாலும் தங்களின் கார்களில் கட்சி கொடியை பறக்கவிடக்கூடாது, அதனை கழற்ற கூறுவதற்கு போலீசாருக்கோ, தாசில்தாருக்கோ அதிகாரம் இல்லை. என்னுடைய வேட்டியில் கூட எங்கள் கட்சி கொடி உள்ளது. அதனையும் கழற்றக்கூட சொல்லும் நிலை ஏற்படும்’
இவ்வாறு அவர் கூறினார்.
காரில் கட்சி கொடி கட்டக்கூடாது என்று தேர்தல் விதி முறை உள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, ‘தேர்தல் விதியில் இதுபோன்று ஓரு மண்ணாங்கட்டியும் கிடையாது’ என்று கூறினார்.
தொல்.திருமாவளவன் கூறும் போது, ‘தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று இதை கருத வேண்டி உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது’ என்றார்.
இதனால் அப்பகுதியில் இரவு 12.30 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் கழக குமார் விடுவிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.