முறையான உரிமம் பெறாமல் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்க கூடாது என்று தனியார் கட்டிட உரிமையாளர்களுக்கு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விதிமீறல்
சென்னை மாவட்டத்தை பொறுத்த வரையில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக அனுமதி வழங்க, மாவட்ட கலெக்டர் மட்டுமே தகுதியுடையவர். உரிய அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் வைப்பவர்களுக்கு சென்னை நகரம் நகராட்சி சட்டம் 1919 பிரிவு 326–ஐ–ன் படி தண்டனையாக 3 ஆண்டுகள் அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
சென்னை மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாத நிலையில், தனியார் கட்டிட உரிமையாளர்கள் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு விளம்பரப்பலகை வைப்பதற்கு அனுமதி அளித்து வருகின்றனர். இவ்வாறு அனுமதி அளிப்பது விதிமீறலாகும். இது குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய ஒன்றாகும்.
நடவடிக்கை
எனவே பொதுமக்கள் மற்றும் தனியார் கட்டிட உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் உரிய உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளைத் தங்களின் கட்டிடங்களில் வைக்க அனுமதிக்கக் கூடாது என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏதாவது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மீது, குற்றவியல் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உரிமம் பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் குறித்தான புகார்களை சென்னை இராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இயங்கிவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 044–25268323, 044–25268320 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.