பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு அது வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாநிலங்கள் அழைத்தால், மதுவுக்கு எதிராக அங்கு சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது:- “ மதுவுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த குழுக்கள் அழைப்பு விடுத்தாலும் அங்கு சென்று மது விற்பனை மற்றும் மது நுகர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன்” என்றார். அப்போது அவரிடம், மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் நாடு முழுவதும் தடை கொண்டு வருவதை நீங்கள் விரும்புகீறிர்களா? என்று நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ இது நடந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சமூக எழுந்துள்ள சமூக இயக்கம் மற்ற மாநிலங்களுக்கும் பரவி அவை ஒவ்வொன்றாக மதுவிலக்கு குறித்து சிந்திக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜார்கண்ட், உ.பி.மாநிலங்கள் பிகாரின் மதுவிலக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அவர்கள் ஒத்துழைக்க கடிதம் எழுதியதுதான் மிச்சம், அவர்கள் மேன்மேலும் எல்லைகளில் மதுக்கடைகளை திறப்பதில்தான் உற்சாகம் காட்டி வருகின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மதுக்கடைகளை திறந்ததுதான்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.