Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

விராட் கோலி, டி வில்லியர்சை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய பந்து வீச்சளார்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருவார் என்று புகழப்படும்  இளம் லெக்ஸிபின்னரான ஆடம் ஸம்பா, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி, டி வில்லியர்சை, இவர்களெல்லாம் யார் என்று கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்  அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியும் டி வில்லியர்சும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன், தனது டுவிட்டரில், விராட் கோலி- டிவில்லியர்ஸ் ஆகியோரது புகைப்படத்தை பகிர்ந்து , “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்ப்பது என் அதிர்ஷ்டம்’ என்று பாராட்டி இருந்தார்.

தோனி தலைமையிலான புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஸாம்பா, இவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பி பதில் டுவிட் செய்து இருந்தார். இதற்கும் பதில் அளித்த கேன் வில்லியம்சன், “இசாந்த் சர்மாவிடம் கேட்டுப்பாருங்கள்” என்று டுவீட் செய்தார். குறிப்பிட்ட அந்த  போட்டியில் இசாந்த் சர்மாவின் பந்து வீச்சை விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் புரட்டி எடுத்தனர். இதனால் அந்த போட்டியில், இசாந்த் 4 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.