Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

குடிநீர் எடுத்து வர சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து சாவு காப்பாற்ற குதித்த கணவரும் பலியான பரிதாபம்


குடிநீர் எடுத்து வர சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். காப்பாற்ற குதித்த அவரது கணவரும் உயிரிழந்தார்.

குடிநீர் பிரச்சினை
மராட்டியத்தில் பல பகுதிகளில் வறட்சி காரணமாக குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், யவத்மால் மாவட்டத்தில் தண்ணீர் எடுத்து வர சென்ற இடத்தில் கிணற்றுக்குள் விழுந்து கணவர், மனைவி பலியான துயரம் சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு–

யவத்மால் மாவட்டம் வட்காவ் அருகில் உள்ள தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் ஜாதவ் (வயது 40). இவரது மனைவி மேனகா (38). வறட்சியால் அங்கு நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வர சென்றனர்.

அங்கு மேனகா வாளியில் கயிறு கட்டி தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

கணவர், மனைவி பலி
தண்ணீருக்குள் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக் ஜாதவ் மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடுத்தடுத்து தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதை அறிந்து தாண்டா கிராம மக்கள் அனைவரும் அங்கு திரண்டு விட்டனர். தகவல் அறிந்த வட்காவ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர், மனைவி இருவரது உடல்களையும் தீயணைப்பு படையினர் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிநீர் எடுக்க சென்ற இடத்தில் கணவன், மனைவி கிணற்றுக்குள் விழுந்து பலியான இந்த சம்பவத்தால் தாண்டா கிராமமே சோகத்தில் மூழ்கியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.