Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

குடிநீர் பிரச்சனை: ஐ.பி.எல். போட்டியை விட மக்கள் முக்கியமானவர்கள் மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்பு


மும்பையில் கிரிக்கெட் மைதானத்தை பராமரிக்க நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, தண்ணீர் பயன்படுத்தியதற்கு வரிகட்ட ஐ.பி.எல். சேர்மனுக்கு உத்தரவிட வேண்டும் என்று மராட்டிய ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக மைதானத்தை பராமரிக்க தண்ணீர் வீணாக்கப்படும் விவகாரத்தில் மராட்டிய அரசை கண்டித்த மும்பை ஐகோர்ட்டு, ஐ.பி.எல். போட்டியை விட மக்கள் முக்கியமானவர்கள் என்று கூறி உள்ளது.

முன்னாள் செய்தியாளர் கேதன் திரோத்கர், மும்பை, நவி மும்பை மற்றும் புனேயில் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது மைதானங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் பயன்படுத்திய ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் ரூ. 1000 வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மராட்டியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவை சரிசெய்ய ஐ.பி.எல். நிர்வாகிகளிடம் கூடுதல் வசூலிக்கவேண்டும் என்றும் பொதுநல மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சனைக்காக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மராட்டியத்தில் இருந்து மாற்றமுடியாது என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறிவிட்டார்.

ஐ.பி.எல். போட்டியை மாநிலத்தில் நடத்தக்கூடாது, அதற்காக அதிகமான தண்ணீர் வீணாக்கப்படுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு உள்ளது. மும்பை பாரதீய ஜனதா கட்சியின் செயலாளர் குப்தாவும் ஐ.பி.எல். போட்டிகளை மாநிலத்தில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.