இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாபயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் மின்னல் ஒன்று விமானத்தின் இறகு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பீதியில் அலறியுள்ளனர்.
இருப்பினும் மின்னல் தாக்கிய விமானத்தை பிரித்தானிய ஏர்வேஸ் விமானி பத்திரமாக ஹீத்ரோ விமானநிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
விமானத்தை மின்னல் தாக்கியபோது அந்த ஒரு நொடி வானம் இரத்தச் சிவப்பாக காட்சியளித்துள்ளதாக கூறுகின்றனர். விமானத்தில் இருந்த பலரும் மின்னலின் தாக்கத்தை உணர்ந்ததாகவும், அது விமானத்தில் மோதுவதை தங்களால் உணர முடிந்தது எனவும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் தரையிறங்கியதில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியுள்ளது, இருப்பினும் முழுமையான சோதனைக்கு பின்னரே அடுத்த சேவைக்கு இந்த விமானத்தை பயன்படுத்த இருப்பதாக பிரித்தானியா ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி அன்றைய தினம் மட்டும் 3 விமானங்கள் மீது மின்னல் தாக்கியுள்ளதாக விமானிகள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். விமானம் மின்னல் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளதால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.