“மக்களின் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக ஓடி வருபவன் நான்” என்று கோவில்பட்டி பிரசாரத்தில் வைகோ பேசினார்.
வைகோ பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவர் நேற்று மாலையில் கோவில்பட்டியை அடுத்த வடக்கு திட்டங்குளம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்பு இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
முன்தாக அவர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல் ஆளாக ஓடி வருவேன்
நான் கடந்த 40 ஆண்டுகளாக பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வருகிறேன். நானும், என்னுடைய தம்பி ரவிச்சந்திரனும் சேர்ந்து சிதம்பரபுரத்தில் பூலித்தேவன் சிலை அமைத்துக்கொடுத்தோம். நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன்.
சாதி ரீதியாக மக்களை பிரித்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். தற்போது அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. மக்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் நான்தான் முதல் ஆளாக நின்று உதவுவேன். எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். எனவே என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை
பின்னர் அவர் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் வைகோ, விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் கதிர்வேலை ஆதரித்து இளம்புவனம், எட்டயபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.