இந்தியா அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்துக்கு பதில் அளித்துஉள்ள இந்தியா,
இந்தியாவின் தற்காப்பு நிலைப்பாட்டை அமெரிக்கா முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்று கூறிஉள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற அணுஆயுத பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ‘இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்து கொள்ள வேண்டும்’’ ராணுவ பலத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த இரு நாடுகளும் தொடர்ந்து தவறான பாதையில் பயணிக்க கூடாது என்றார். ஒபாமாவின் கருத்துக்கு பதிலளித்து உள்ள இந்தியா, இந்தியாவின் தற்காப்பு நிலைப்பாட்டை அமெரிக்கா முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டு உள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், முதலாவதாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது இந்தியாவின் கொள்கை கிடையாது, எந்தஒரு அண்டைய நாட்டிற்கும் எதிராக இந்தியா முதலாவதாக ஆயுதம் தூக்காது என்று கூறிஉள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய விகாஸ் ஸ்வரூப், “ஆம், நாங்களும் இவ்விவகாரம் தொடர்பான கருத்துக்களை பார்த்தோம். இந்தியாவின் தற்காப்பு நிலைப்பாட்டை முழுமையாக புரிந்துக் கொள்வதில் அவர்களிடம் குறைபாடு உள்ளது. வழக்கமாக, இந்தியா எந்தஒரு அண்டைய நாட்டிற்கும் எதிராக முதலில் ஆயுதம் தூக்காது... அதேபோன்று எந்தஒரு நாட்டிற்கும் எதிராக அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் கொள்கையும் இந்தியாவிடம் கிடையாது,” என்று கூறிஉள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.