என்னுடைய தந்தையின் வெளிநாட்டு பணத்தால் பயனடைந்தேன் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் ஒப்புக்கொண்டார்.
பனாமா பேப்பர்ஸ் தகவல்கள் வெளியாகியதில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று குறிப்பிடப்பட்டது. இவ்விவகாரம் கேமரூனுக்கு பெரும் நெருக்கடியை எழசெய்ததையடுத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் வெளிநாட்டில் தன்னுடைய தந்தையின் மூலமாக 30000 பவுண்ட் மதிப்பிலான பங்கு கொண்டிருந்தேன் என்று ஒப்புக் கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டே இங்கிலாந்து பிரதமராக பதவி பிரமாணம் ஏற்படுவதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்கை விற்பனை செய்துவிட்டேன் என்று சேனல் ஐ.டி.வி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.
”பிளைர்மோர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டில் 5,000 பங்குகளை கொண்டிருந்தோம், இவை அனைத்தும் கடந்த 2010-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. பங்குகள் மதிப்பு 30,000 பவுண்ட்கள் ஆகும். பிரதமர் ஆக இருந்த நிலையில் அனைத்தையும் 2010-ம் ஆண்டே விற்பனை செய்துவிட்டேன்,” என்று கேம்ரூன் கூறிஉள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.
இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் உலக நாடுகளின் பிரபலங்கள் மற்றும் 140 அரசியல் தலைவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.