Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

உலகிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் பட்டியல்: ரகுராம் ராஜன், சானியா மிர்சா இடம்பெற்றனர்



உலகிலேயே மிகவும் செல்வாக்கான 100 பேர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டைம்‘ வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ‘கூகுள்‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ‘பிளிப்கார்ட்‘ நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மியான்மர் தலைவி ஆங்சான் சூகி, அமெரிக்க முன்னாள் மந்திரி ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க காத்திருக்கும் குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க இசையமைப்பாளர் லின் மேனுவல் மிராண்டா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

அந்த பத்திரிகையில், ரகுராம் ராஜனை ‘பொருளாதார தீர்க்கதரிசி‘ என்று வர்ணித்துள்ளனர். கடந்த 2006–ம் ஆண்டுவரை அவர் பன்னாட்டு நிதியத்தில் பணியாற்றியபோது, உலக பொருளாதார பின்னடைவை முன்கூட்டியே கணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.