சென்னை போலீஸ் குதிரைப்படை குதிரைகளுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால், பாதிப்பு ஏற்படாமல் தடுக்க குளுகோஸ், டானிக் மற்றும் ஐஸ் தண்ணீர் கொடுக்கிறார்கள்.
27 குதிரைகள்
சென்னை போலீஸ் குதிரைப்படை, பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள 33 லாயங்களில் செயல்படுகிறது. இங்கு 13 பெண் குதிரைகளும், 14 ஆண் குதிரைகளும் உள்ளன. தற்போது கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. இந்த வெயிலின் தாக்கத்தால் குதிரைகள் மஞ்சள் காமாலை நோயினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே குதிரைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி, போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் அருணாச்சலம், துணை கமிஷனர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் ஹிட்லர் ஆகியோர் மேற்பார்வையில், குதிரைப்படை பொறுப்பு இன்ஸ்பெக்டர் பெரிய கருப்பன், குதிரைகளை வெயில் கொடுமையில் இருந்து காப்பாற்ற சில விசேஷ ஏற்பாடுகளை செய்துள்ளார்.
குளுகோஸ், ஐஸ் தண்ணீர்
குதிரைகள் அடைக்கப்பட்டுள்ள 33 லாயங்களிலும் மின் விசிறி பொருத்தப்பட்டுள்ளது. வெற்றி வேர் தட்டிகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் தண்ணீரை ஊற்றி தினமும் குளிர்ச்சி உண்டாக்குகிறார்கள். குதிரைகளுக்கு வழங்கும் உணவு வகைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு டானிக் கலந்த உணவு கொடுக்கப்படுகிறது. குளுகோசை, ஐஸ் தண்ணீரில் கலந்து கொடுக்கிறார்கள்.
இந்த சிறப்பு ஏற்பாடுகளுக்காக ஒவ்வொரு குதிரைக்கும் தினமும் தலா ரூ.415 வீதம் செலவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைகளைப்போல, அடுத்த 3 மாதங்களும் இந்த குதிரைகளை பார்த்துக்கொள்வோம், என்று குதிரைப்படையை பராமரிக்கும் போலீசார் கூறினார்கள். வயதான குதிரை ஒன்று நோய்வாய்ப்பட்டு, அண்மையில் இறந்து போனது. அந்த குதிரையின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.