தீவிரவாதிகள்-போதை மருந்து கும்பலுக்கு நிதி கிடைப்பதை சர்வதேச நாடுகள் தகர்க்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி வற்புறுத்தினார்.
3 நாள் சிறப்பு மாநாடு
தீவிரவாதத்தை போலவே உலக நாடுகளை அச்சுறுத்தும் பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது போதை மருந்து கடத்தல் ஆகும். இது குறித்த 3 நாள் சிறப்பு மாநாடு 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
நெருங்கிய உறவு
இன்றைய நாகரிக சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்றாக தீவிரவாதம் திகழ்கிறது. தீவிரவாதத்துக்கு எல்லை கிடையாது. தீவிரவாதிகள் உலகநாடுகளின் பல்வேறு நகரங்களையும், அப்பாவி மக்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். தற்போது, தீவிரவாதிகளுக்கும், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டு இருக்கிறது.
அவர்களின் ஒன்றுபட்ட நெருக்கம் நாடுகளின் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஆபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுபோன்ற தீய சக்திகளை விரட்டுவதற்கு சர்வதேச சமூகம் அனைத்தும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
தகர்க்கவேண்டும்
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு தவறான வழிகளில் பணம் கிடைக்கிறது. சட்டவிரோதமாகவும் நிதி குவிகிறது. இவை நமக்கு பெரும் சவால்களாக திகழ்கின்றன. போதை மருந்து கடத்தல் குற்றச் செயல்கள் மூலமாகத்தான் நாடு கடந்த ஏராளமான குற்றங்கள் நடக்கின்றன.
உலக நாடுகள் அனைத்தும் 2030-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி காண வேண்டும் என்கிற ஐ.நா.வின் நோக்கத்துக்கு தீவிரவாதமும், போதை மருந்து கடத்தலும் பெரும் தடைகளாக உள்ளன.
இந்த குற்றங்களின் ஒருங்கிணைப்பும், போதை மருந்து கடத்தல்காரர்கள் தீவிரவாதிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாரத்தை உலக நாடுகள் தகர்க்க வேண்டும்.
ஒத்துழைப்பு தேவை
போதை மருந்து பொருட்கள் உலக அளவில் நாடுகளுக்கு கடத்தப்படுவதை பொறுத்தவரை ஐ.நா. சபையில் இந்தியா ஏற்கனவே பலமுறை தனது குரலை எழுப்பி இருக்கிறது.
தவிர உள்நாட்டில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோர், ஓபியம் சாகுபடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதி பூண்டும் உள்ளது. கடும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய அளவிலான நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதாது. இருநாடுகள், பிராந்திய நாடுகள், சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே போதை பொருள் பிரச்சினைக்கு தீர்வைக் காண இயலும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.