Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்ததால் சோக முடிவு ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை


குழந்தையுடன் மனைவி ஏற்கனவே தற்கொலை செய்துவிட்ட துக்கத்தில் தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி தற்கொலை

சென்னை செனாய்நகர் கதிரவன் காலனியை சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 34). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்த அவரது மனைவி பெயர் சங்கீதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

இவர்கள் ஆவடி சேக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா 27.7.2015 அன்று குழந்தையுடன், இந்து கல்லூரி அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.

ரெயில் முன் பாய்ந்தார்

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நரேந்திரன் செய்வதறியாது தவித்தார். குழந்தையின் நினைவு அவரை வாட்டியது. நேற்று மாலை 5 மணிக்கு நரேந்திரன் பட்டாபிராம் ரெயில் நிலையம் அருகே, சென்னையிலிருந்து வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நரேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்திலிருந்து நரேந்திரன் எழுதிய 5 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். நேற்று நரேந்திரனின் குழந்தை மோனிஷாவின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளன்று அவர் இந்த பரிதாப முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.