அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் உள்ள தெரு ஒன்றிற்கு சமூக சேவையாற்றிய இந்திய அமெரிக்கரை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த வகையில் அங்கீகாரம் வழங்குவது என்பது ஓர் அரிய நிகழ்வாகும்.
அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர், மிஸ்ஸிசிப்பி மாகாணத்தின் மனநல துறை வாரியத்தின் தலைவராக கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தென் அமெரிக்க மாகாணத்தின் சுகாதார துறையில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர்.
இந்நிலையில் மாகாண ஆளுநர் பில் பிரையண்ட் இப்பதவிக்கு ஷிவாங்கியை மீண்டும் இந்த வாரம் நியமனம் செய்துள்ளார். அதன்படி அவர் 7 வருடம் இப்பதவியில் நீடித்திடுவார்.
இதுபற்றி ஷிவாங்கி வெளியிட்டுள்ள செய்தியில், என் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆளுநர் பில் பிரையண்டுக்கு நன்றியுடையவனாக நான் இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு இப்பதவியை ஏற்றதிலிருந்து துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளேன் என கூறியுள்ளார். மனநல துறை மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் 2வது மிக பெரிய அமைப்பு ஆகும்.
இந்த துறை மனநலம் பாதிப்பு, அறிவு வளர்ச்சியில் குறைபாடு மற்றும் போதை பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளிப்பதில் மிக பெரும் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் உள்ள தெரு ஒன்றிற்கு டாக்டர் சம்பத் ஷிவாங்கி லேன் என முறைப்படி நேற்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 2005-2008ம் ஆண்டு வரை, அமெரிக்க செயலகத்தின் சுகாதார மற்றும் மனித சேவை துறையின் ஆலோசகராக ஷிவாங்கி பதவி வகித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர்களுக்கான அமெரிக்க கூட்டமைப்பின் நிறுவன தலைவராகவும் இருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.