விமான பணிப்பெண்ணை விமானிகளுக்கான காக்பிட் அறையில் இருக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்த விமானியை பணி நீக்கம் செய்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கொல்காத்தாவில் இருந்து பாங்காங்க் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், விமானி தனது காக்பிட் அறைக்குள் விமான பணிப்பெண்ணை அழைத்து இருக்கையின் அருகே அமர வைத்தகாக புகார் எழுந்தது. இதேபோன்று விமானம், பாங்காங்கில் இருந்து திரும்பும் போதும் விமானியும் விமான பணிப்பெண்ணும் காக்பிட் அறையில் தனியாக இருந்துள்ளனர்.
துணைவிமானியை காக்பிட் அறையில் இருந்து வெளியே போகச்செய்துவிட்டு விமானி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து புகார் கிடைத்ததையடுத்து, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விசாரணையில் ஈடுபட்டது. விசாரணையின் முடிவில் விமானியை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.