Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

ஜடேஜா திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு


ராஜ்கோட்,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் இரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக ரவீந்திர ஜடேஜா மணக்கோலத்தில் குதிரையில் அழைத்து வரப்பட்ட போது, சில அடி தூரத்தில் நின்ற அவரது உறவினர்களில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ராஜ்கோட் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆன்ட்ரிப் சூட் கூறும் போது, ‘அந்த நபர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிய உரிமம் பெற்றிருக்கிறாரா இல்லையா? என்பது குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தினோம். விசாரணைக்கு பிறகு எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம். துப்பாக்கிக்கு லைசென்ஸ் வைத்திருந்தாலும் கூட தற்காப்பு நடவடிக்கையை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாகும்’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.