Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.58¼ லட்சம் ஹவாலா பணம் சிக்கியது 2 பேர் கைது


தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.58¼ லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாலக்காடு பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது காரில் உள்ள ‘ஹேண்ட் பிரேக்’ அடியில் ரகசிய அறையில் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய இடத்தில் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதில் மொத்தம் ரூ.58 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது.

2 பேர் கைது

இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவை சேர்ந்த நவ்சத் பாபு (வயது 32), பாலக்காடு மவட்டம் கரிங்கல்லதானி பகுதியை சேர்ந்த மன்சூர் அலி (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் சேலத்தில் இருந்து ஹவாலா பணம் கடத்தி வந்ததும் தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.