ஒரு வகை வைரஸால் தாக்கப்பட்டும் மனிதருக்கு மிருக குணம் வந்துவிடும். அவர்கள் பிறரைக் கடித்துக் கொல்வார்கள். இந்த மிருக மனிதர்கள்தான் சோம்பி.
சோம்பிகளை வைத்து ஹாலிவுட்டில் வெளியான முதல் படம், “வொய்ட் சோம்பி” (White Zombie ). இது 1932-ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பின் நூற்றுக்கணக்கான சோம்பி படங்கள் வெளியாகிவிட்டன.
நார்வே மொழியில் 2009-ம் ஆண்டு “டெட் ஸ்னோ” என்ற சோம்பி படம் வெளியானது. பாலிவுட்டன் முதல் சோம்பி படம், “கோ கோவா கான்” சையிப் அலிகான் நடித்திருந்தார்.
தமிழில் முதல் சோம்பி படம், ஜெயம் ரவி நடித்த “மருதன்”
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஹைதி நாட்டில் இப்படிப்பட்ட சோம்பிகள் நிறைய உண்டு. இது குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்பி அங்கு சென்றார் அமெரிக்க ஆராய்ச்சியளாரான வேட் டேவிஸ். சோம்பிகள் குறித்து The Serpent and the Rainbow என்ற தலைப்பில் 1985-ம் வருடம் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் டேவிஸ்.
1982-ம் ஆண்டு ஆபிபிரிக்க சென்றவர், அங்கேயே , சில வருடங்கள் தங்கி ஆராய்ச்சிகளை செய்தார். மனிதர்களை சோம்பிகளாக்குவது, ஆப்பிரிக்க மந்திரவாதிகளிடம் இருந்த “சோம்பி பவுடர்”தான் என்பதை கண்டுபிடித்தார். ஹைதி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலவகையான சோம்பி பவுடர்களை சேகரித்து ஆராய்ச்சி செய்தார்.
‘பபர்’ என்ற விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் சோம்பி பவுடர், முதல் வகை. இரண்டாவது வகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மூன்றாவது இறந்த மனிதனின் எலும்புகளிலிருந்தும் பிற கழிவுகளிலிருந்தும் தயாரிக்கப்படுவது
இந்த மூன்று வகை சோம்பி பவுடர்களிலும் வேறு சில நச்சுத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்ற பல பொருள்களும் கலக்கப்படுமாம். .
ரொம்ப எபக்டிவான சோம்பி பவுடர் என்று டேவிஸ் கூறுவது, பபர் மீனிலிருந்து தயாரிக்கப்படும் சோம்பி பவுடரைத்தான். அந்த மீனில் ‘டெட்ரோடோடாக்ஸின்’ என்ற கொடிய நச்சு உண்டு. அது மனிதனின் ரத்தத்தில் கலந்து விட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். அதாவது ரத்த வாந்தி, நுரையீரல் பாதிப்பு என பலவகை பாதிப்புகள். நாடித் துடிப்பு ‘பிண நிலை’க்குக் கொண்டு சென்றுவிடும். ஆனால், அந்த நபரால் தன்னைச் சுற்றி நடப்பதை உணர முடியும். ஆனால் அதற்கு எதிர்வினை காட்ட முடியாது. என தனது புத்த்கத்தில் டேவிஸ் கூறி உள்ளார்.
ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், தனக்கென சோம்பி படையை உருவாக்க விரும்பினார். அது தோல்வியில் முடிந்தது. ஆமாம்.. “தி ப்ரதர் ஹூட் ஆஃப் டெத்” என்ற பெயரில் சூனியக்காரர்கள் கொண்ட ரகசியக் குழுவை உருவாக்கியிருந்தார் ஹிட்லர் அந்த குழுவில் சுமார் நாற்பது மந்திரவாதிகள் இருந்தார்கள்.
அந்த மந்திர குழுவைக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான “நாஜி சோம்பி”களை உருவாக்க ஹிட்லர் திட்டமிட்டார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தத் தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
தொழிற்நுட்ப வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் திரைப்படம், இசை, விளையாட்டு போன்றவற்றை நேரிடையாகவே அனுபவிக்கும் வகையில் தொழிற்நுட்பம் வளர்ந்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனைத்துமே சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் வீடியோ கேம் விளையாடும் ஒரு பெண் சோம்பிகளை கண்டு பயந்து அலறும் வீடியோ வைரலாகியுள்ளது. நார்வேயை சேர்ந்த ரினெடி என்ற பெண்மணி சோம்பிகளை கொல்லும் வீடியோ கேமை விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்பம் மூலம் விளையாடியுள்ளார்.
முதலில் சாதாரணமாக விளையாடிய அவர் சோம்பிகள் அருகே வரவர பயத்தில் அலற தொடங்கினார். விளையாட்டு என்பதை மறந்து உண்மையிலேயே தன்னை சோம்பிகள் நெருங்கி வருவதாக நினைக்க தொடங்கினார்.
இறுதியில் தான் அணிந்திருந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை கழற்றிய பின்பு தான் அவர் இயல்பு நிலைக்கு வந்தார். இந்த காட்சிகளை பதிவுசெய்த அவரது தோழி கார்ல் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.