ரஷ்யாவைச் சேர்ந்தவர், பிரபல சிகை அலங்கார நிபுணர், டெனிஸ் யுசின். இவருக்கு, தன்னுடைய சின்ன கடைக்குள் அமர்ந்து, சிகை அலங்காரம் செய்வதை விட, உலகம் முழுவதும் சுற்றி, வித்தியாசமான சூழ்நிலையில், சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என வித்தியாசமான ஆசை தோன்றியது.
இதனால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில், சிகை அலங்கார பெட்டியுடன், உலகை வலம் வருபவர், பாராசூட்டில் பறந்தபடியும், பனிப் பிரதேசங்களில் அமர்ந்தும், தண்ணீருக்குள் நீச்சலடித்த படியும், பலருக்கு சிகை அலங்காரம் செய்து, சாதித்து காட்டியுள்ளார். இவருக்கு, மனைவியும், ஆறு வயதில், ஒரு மகளும் உண்டு.
தன், சாதனையை நிறைவேற்றுவதற்காக, குடும்பத்தை விட்டு பிரிந்து, மங்கோலியா, சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் என, ஒவ்வொரு நாடாக, மோட்டார் சைக்கிளில் சுற்றி வருகிறார்.
உலக புகழ்பெற்ற, 'பெராரி' கார் தயாரிப்பாளர், 'பெராரி டெக்சேலஞ்சு' என்ற பெயரில், கார் தொழில்நுட்பம் சம்பந்தமாக, போட்டிகள் நடத்துவதுண்டு. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கார் டெக்னீஷியன்கள், இப்போட்டியில் கலந்து கொள்வர்.
சமீபத்தில், கேரளாவில் நடந்த இப்போட்டியில், திரிச்சூர் அருகில் உள்ள விய்யூரை சேர்ந்த, ஜஸ்டின் அகஸ்டின் முதலிடத்தை பெற்றார். சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு டெக்னீஷியன்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
கடந்த, 1995ல் கேரளாவிலுள்ள பட்டாசு கம்பெனி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இவரது தந்தை இறந்த போது, இன்ஜினியர் படிப்புக்கு முழுக்கு போட்ட ஜஸ்டின், கார் தொழில்நுட்பம் பற்றி அறிவதில் தீவிரமாக இறங்கினார். எப்படிப்பட்ட காராக இருந்தாலும், அதை, எளிதில் பழுது பார்த்து, சரி செய்து விடுவார். 2002ல் சென்னையில் நடந்த, 'மாருதி சவுத் சோன் ஸ்கில்' டெஸ்டில் முதலிடத்தை பெற்றார். உலகில் எங்கு கார்கள் பற்றிய தொழில்நுட்ப போட்டி இருந்தாலும், இவர் அதில் எளிதாக வென்று விடுகிறார்.
இதனால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில், சிகை அலங்கார பெட்டியுடன், உலகை வலம் வருபவர், பாராசூட்டில் பறந்தபடியும், பனிப் பிரதேசங்களில் அமர்ந்தும், தண்ணீருக்குள் நீச்சலடித்த படியும், பலருக்கு சிகை அலங்காரம் செய்து, சாதித்து காட்டியுள்ளார். இவருக்கு, மனைவியும், ஆறு வயதில், ஒரு மகளும் உண்டு.
தன், சாதனையை நிறைவேற்றுவதற்காக, குடும்பத்தை விட்டு பிரிந்து, மங்கோலியா, சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் என, ஒவ்வொரு நாடாக, மோட்டார் சைக்கிளில் சுற்றி வருகிறார்.
சமீபத்தில், கேரளாவில் நடந்த இப்போட்டியில், திரிச்சூர் அருகில் உள்ள விய்யூரை சேர்ந்த, ஜஸ்டின் அகஸ்டின் முதலிடத்தை பெற்றார். சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு டெக்னீஷியன்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
கடந்த, 1995ல் கேரளாவிலுள்ள பட்டாசு கம்பெனி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இவரது தந்தை இறந்த போது, இன்ஜினியர் படிப்புக்கு முழுக்கு போட்ட ஜஸ்டின், கார் தொழில்நுட்பம் பற்றி அறிவதில் தீவிரமாக இறங்கினார். எப்படிப்பட்ட காராக இருந்தாலும், அதை, எளிதில் பழுது பார்த்து, சரி செய்து விடுவார். 2002ல் சென்னையில் நடந்த, 'மாருதி சவுத் சோன் ஸ்கில்' டெஸ்டில் முதலிடத்தை பெற்றார். உலகில் எங்கு கார்கள் பற்றிய தொழில்நுட்ப போட்டி இருந்தாலும், இவர் அதில் எளிதாக வென்று விடுகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.