கற்பழிப்பு வழக்கில் இசையமைப்பாளர் அங்கித் திவாரிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெண் வழக்கு
மும்பையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், இசையமைப்பாளரும், பாடகருமான அங்கித் திவாரி திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை கற்பழித்ததாக புகார் கொடுத்தார். மேலும் அங்கித் திவாரியின் சகோதரன் அன்கூர் திவாரி இது தொடர்பாக தன்னை மிரட்டி வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது.
பிடி வாரண்டு
ஆனால் இந்த 2 நாட்களிலும் அங்கித் திவாரி விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அங்கித் திவாரி மீதான கற்பழிப்பு வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கித் திவாரியை ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டில் கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.