ஓட்டு போடுவதற்கு பணத்தை, ‘‘எப்ப தருவாங்க, எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது? ஆனா தரும் போது வாங்காதீங்க!. என்றும், ஒரு தடவ வாங்குனா, ஐந்து வருஷத்துக்கு நீங்க ஏமாந்த மாதிரி என்றும் ரஜினி ஸ்டைலில் தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்து வருகிறது.
100 சதவீத ஓட்டு
இந்த தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரசாரத்தை விட தேர்தல் கமிஷனின் பிரசாரம் அதிகளவில் இருக்கிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காகவும், மக்கள் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடக்கூடாது என்பதற்காகவும் தேர்தல் கமிஷன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக அனைத்து இடங்களிலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகளை வைத்து உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தி வருகிறது. அதுதவிர சமூக வலைதளங்களிலும் தீவிர பிரசாரத்தை செய்து வருகிறது.
ரஜினி ஸ்டைலில்...
இதற்காக தனது முகநூல் பக்கத்தில் தினம், தினம் புதிய வாசகங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக ரஜினிகாந்தின் பஞ்சு வசனங்கள் அப்படியே மாற்றப்பட்டு, வெளியிடப்படுகிறது.
உதாரணமாக ரஜினி முத்து படத்தில், ‘‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’’ என்று ஸ்டைலாக பேசுவார். அந்த வசனத்தை தேர்தல் கமிஷன், பணத்தை உங்களுக்கு ‘‘எப்ப தருவாங்க, எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது? ஆனா தரும் போது வாங்காதீங்க!’’ என்று மாற்றி சொல்கிறது.
பாட்ஷா வசனம்
அதே போல் ரஜினி பாட்ஷா படத்தில், ‘‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’’ என்பார். அந்த வசனம், ‘‘ஒரு தடவ நீங்க வாங்குனா, அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி’’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இது தவிர ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதனை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வாசகங்கள் வருமாறு:-
* நோட்டுக்கு வோட்டு, நாட்டுக்கு வேட்டு..
* 100 சதவீதம் ஒட்டு போட்டா சரித்தரம், போடலேனா நாட்டுக்கே தரித்திரம்.
* மத்த நாட்டில் எல்லாம் கடமையை மீறுவதற்கு பணம். நம்ம நாட்டுல தான் கடமையை செய்வதற்கு பணம்.
* உன் வாழ்க்கை உன் கையில் (இது ரஜினி பஞ்ச்). நம் சமுதாய மாற்றம் நம் விரலில் (இது தேர்தல் பஞ்ச்)
காசு, பணம், துட்டு
* ஒரு தடவ முடிவு பண்ணிட்டா...மத்தவங்க பேச்சை கேட்காதீங்க, பணம் வாங்காம ஓட்டு போடுங்க....(இது நடிகர் விஜய் பஞ்ச்).
* இங்க என்ன சொல்லுது.. பணம் வேணாம் வேணாம்னு சொல்லுதா?
* கடமையை செய்ய பணத்தை எதிர்பார்க்காதே!
* என் வாக்கு விற்பனைக்கு அல்ல.
* காசு, பணம், துட்டு ஒழி! ஒழி!
* காசு, ஆடம்பரம். வோட்டு அத்தியாவசியம்.
* வாங்காதே தம்பி வாங்கதே! நீ வாங்கிய பிறகு ஏங்காதே!.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.