திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் பிரதீப்குமார் (வயது 19). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழிப்பறி வழக்கில் மீஞ்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 18 முதல் 21 வயதான குற்றவாளிகளை அடைத்துவைக்கும் ‘போர்செல்’ எனப்படும் தனி அறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று காலை பிரதீப்குமார் உள்ளிட்ட 5 பேர் போர்செல் அறையின் பின் புறம் உள்ள புதர்களை அகற்றும் பணிக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
இவர்களை சிறைக்காவலர் பாரத்கென்னடி என்பவர் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரதீப்குமார் அருகிலிருந்த 6 அடி உயரமுள்ள மதில்சுவர் மீது ஏறி குதித்து பார்வையாளர் அறைவழியாக சென்று அங்கிருந்து ராட்சத மதில்சுவர் மீது ஏறி கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து புழல் சிறை சார்பில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் டேவிட் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப்குமாரை தேடி வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.