Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

டி.வி. நடிகை பிரதியுஷா கர்ப்பம், தற்கொலை செய்வதற்கு முன்னதாக கருவை கலைப்பு செய்திருக்க சாத்தியம்


தற்கொலை செய்துக் கொண்ட டி.வி. நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்து உள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக கருவை கலைத்து இருக்க சாத்தியம் உள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா(வயது 24). இவர் நடித்த ஒரு இந்தி தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘மண்வாசனை’ என்ற பெயரில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரதியுஷா ஏப்ரல் 1-ம் தேதி மாலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல்சிங் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட டி.வி. நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்து உள்ளார் என்று ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்து உள்ளனர். பிரதியுஷா தற்கொலை செய்துக் கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக கருவை கலைத்திருக்க சாத்தியம் உள்ளது. பிரதியுஷா கருப்பபையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்த சம்பவம் தெரியவந்து உள்ளது. பிரதியுஷா கருவை கலைத்துவிட்டு பின்னர் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார் என்பது வழக்கில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வளவு நாட்கள் அவர் கர்ப்பமாக இருந்தார் என்பது தெரியவரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை செய்த சம்பவத்தில் காதலன் ராகுலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 25–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.