சொர்க்கமும், நரகமும் உங்கள் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறது. நீங்களும், அவர்களும் நல்லபடியாக பழகினால், அதுவே மகிழ்ச்சி தரும் சொர்க்கம். இரண்டு பேரும் மோதிக்கொண்டே இருந்தால், அதுவே நரகம். இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும்.
பக்கத்து வீட்டினரிடம் அன்பாக பழகி, மகிழ்ச்சியாக வாழ தேவையான ‘டிப்ஸ்’!
எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். பிரச்சினை இருப்பது தெரிந்தும் உதவாமல் எல்லாம் முடிந்த பின்பு, ‘நீங்கள் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் உதவியிருப்பேனே!’ என்பது போல் சாக்குப்போக்கு சொல்லாதீர்கள். நீங்கள் செயலில், வார்த்தையில் எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
என்னதான் சகஜமாக பழக கூடியவராக இருந்தாலும் நேரம்கெட்ட நேரத்தில் போய் அவர்கள் வீட்டில் உட்கார்ந்துவிடாதீர்கள். உங்கள் வேலை முடிந்துவிட்டால் வீட்டோடு இருங்கள். மற்றவர்கள் வேலையை கெடுக்காதீர்கள்.
பக்கத்து வீட்டினர் அவர்களது குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே செல்வதை தவிர்த்திடுங் கள். ஆலோசனை என்ற பெயரில் உங்கள் அனுபவங்களை எல்லாம் அள்ளி அவர்களது தலையில் கொட்டிவிடாதீர்கள்.
‘நேற்று வீடு பூட்டியிருந்ததே எங்கே போனீர்கள்? உங்கள் வீட்டிற்கு நாலைந்து பேர் வந்தார்களே அவர்கள் யார்?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘நமது வீட்டை அவர் உளவு பார்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்துவிடும்.
பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகளை அரசல் புரசலாக கேட்டுவிட்டு அவர்களிடமே போய் அதை பற்றி விசாரிக்காதீர்கள். அவர்களாக கேட்டால் மட்டும் ஆலோசனை கூறுங்கள்.
பக்கத்து வீட்டு பெண்மணி குண்டாக இருந்தாலும், சிறுமியோ– சிறுவனோ குண்டாக இருந்தாலும் அதை சொல்லிக்காட்டவேண்டாம். அவர்கள் குண்டாக இருப்பது, ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். அதை நீங்களும் போய் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.
நாளைக்கு தருகிறேன் என்று அடிக்கடி பணம் வாங்குவது, அவ்வப்போது ஏதாவது பொருட்களை கேட்டு வாங்குவது போன்றவைகளை தவிர்த்திடுங்கள்.
குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளை பற்றி பேசாமல், அவர்களது நிறைகளை பற்றி மட்டும் பேசுங்கள். பக்கத்து வீட்டுக்காரரை பற்றி அடுத்த வீட்டுக்காரரிடம் குறை சொல்லாதீர்கள். காலப்போக்கில் இரு வீட்டாருமே உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.
இன்றைய சூழலில் ஆண்– பெண் நட்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக வாழ்வதும் அதிகரித்து வரு கிறது. அப்படி யாராவது உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவர்களைப் பற்றி தவறாக பேசிவிடாதீர்கள். அடுத்தவர்கள் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் அன்பு செலுத்துகிறார் என்பதற்காக, அடிக்கடி அவர் களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையாகிவிடும்.
மற்றவர்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை இரவல் வாங்காதீர்கள். வாங்கினால் உடனே திருப்பிக்கொடுத்துவிடுங்கள்.
உங்கள் வீட்டு நாய் அண்டை வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துவிட்டால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரம், ஓய்வெடுக்கும் நேரங்களில் அண்டை வீட்டுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள்.
பக்கத்து வீட்டுக்காரரின் சுபாவத்தை புரிந்துகொள்ளுங்கள். அவர் அளவோடு பேசுபவர் என்றால் நீங்களும் அந்த அளவை கடைப்பிடியுங்கள். வளவளவென அவரிடம் பேசி அவரை வருத்தப்படவைத்துவிடாதீர்கள்.
நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அண்டை வீட்டுக்காரர்கள் ஒன்றுகூடி முடிவெடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். தனித்து நின்றுவிடாதீர்கள். பிறகு அனைவரும் உங்களை எதற்கும் கூப்பிடாமல் ஒதுக்கிவிடுவார்கள்.
அக்கம் பக்கத்து வீட்டு சண்டைகளை ஒட்டுக்கேட்டு நீங்களாகவே கொஞ்சம் கற்பனையை சேர்த்து விளம்பரப்படுத்தாதீர்கள். இல்லாததை இருப்பதாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் குடும்ப விஷயத்தில் விளையாடாதீர்கள். அவரவர் குடும்பத்தில் ஆயிரம் இருக்கும். அதில் மூக்கை நுழைப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.
உங்கள் அண்டைவீட்டுக்காரர் நல்லவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.