காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2–ந் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘திருநங்கைகள் அவசரமாக உயர் பதவிகளுக்கு செல்ல நினைக்கிறார்கள் என்று சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
குஷ்புவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திருநங்கை சுதா தலைமையில் 20–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். குஷ்புவுக்கு எதிராக ஆவேசமாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து திருநங்கையும், சமூக ஆர்வலருமான சுதா நிருபர்களிடம் கூறும்போது, ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பற்றி குஷ்பு இழிவாக கருத்து வெளியிட்டார். தற்போது தேர்தலில் போட்டியிட எங்களுக்கு தகுதி உண்டா? என்று இழிவுபடுத்தும் விதமாக பேசி உள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.ஜோதி சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குஷ்பு இவ்வாறு கருத்து கூறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.