Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

முதுமையிலும் இளமை..!


தாய்லாந்தின் புகழ்ப்பெற்ற அழகி ஒருவர் 67 வயதானாலும், 18 வயதுக்கு ஏற்ற இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தாய்லாந்தில் ‘முதல் மிஸ்.யுனிவர்ஸ்’ பட்டம் பெற்றவர் அபாஸ்ரா ஹாங்சகுலா. 1947–ம் ஆண்டு பிறந்த இவர், 18 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அதன்பின் சில ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கினாலும், காலப்போக்கில் உலகம் அவரை மறந்துவிட்டது.

இந்த நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அபாஸ்ரா புகழின் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். தற்போது இவரை பற்றி பேசாத ஊடகங்களே இல்லை என்று கூறலாம். இதற்கு காரணம் 67 வயதிலும் அழகு சிறிதுகூட குறையாமல் இளமையுடன் இருப்பதுதானாம். பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்; இளமைக்காகப் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் உலவினாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சந்தோஷமான மனநிலை தான், தன்னுடைய இளமை ஜொலிப்புக்கு காரணம் என்கிறார் இந்த அழகி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.