Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

ஒபாமாவை இப்படி அவமதிக்கலாமா? - ஒரு உணவகத்தின் உச்சக்கட்ட அநாகரிகம்!


ரஷ்யா நாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று,  அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை மிகவும் கீழ்த்தரமாக அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் Krasnoyarsk என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த மாதம்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பெருமைப்படுத்தும் வகையில், ‘President Café’ என்ற உணவகத்தை, பெயர் வெளியிடப்படாத ஒருவர் புதிதாக திறந்துள்ளார்.

இந்த உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புடினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதி பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமில்லாமல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஜெர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ரஷ்ய அதிபரின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளதால், உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யாவையும், அதிபர் புடினையும் பெருமைப்படுத்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இந்த வேலைகளை செய்துள்ளார்.

ஆனால், இந்த உணவகத்தின் கழிப்பறையில் உரிமையாளர் செய்துள்ள ஒரு காரியம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’ (Floor-mat) அமெரிக்க தேசிய கொடியில் இருக்கிறது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் மீது ஏறி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, கழிவறையில் உள்ள ‘டாய்லெட் பேப்பரில்’(Toilet Paper) அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.