இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய தொழில் நுட்ப மைய வளாகத்தில் 15 டெராபிளாப்ஸ் திறன் கொண்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். பரம் கஞ்சன்ஜங்கா என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெறுகிறது.
இதனை நவீன கணினி தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் (சி-டி.ஏ.சி.) மற்றும் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது.
இது பற்றி சிக்கிம் தேசிய தொழில் நுட்ப மையத்தின் (என்.ஐ.டி.) இயக்குநரான பேராசிரியர் அருண் சமடர் கூறும்பொழுது, வடகிழக்கு பகுதியின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற தனித்தன்மையுடன், அனைத்து என்.ஐ.டி.களிலும் இருப்பதை விட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பெருமையையும் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
நவீன இன்டெல் பிராசஸர் தொழில் நுட்பத்துடன் 15 டெராபிளாப்ஸ் திறனுடன் அனைத்து மட்டத்திலான ஆய்வுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.2 கோடி செலவாகியுள்ளது. மின்சாரம் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதி ஆகிய உட்கட்டமைப்புகளை கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
புனே நவீன கணினி தொழில் நுட்ப மேம்பாட்டு மையத்தின் (சி-டி.ஏ.சி.) செயல் இயக்குநர் ஹேமந்த் தர்பாரி கூறும்பொழுது, சீரியல் கம்ப்யூட்டிங்கில் மிக பெரிய சவால்களை தீர்ப்பதற்காக இந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் திறனில் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே முன்னேற்றம் கண்டுள்ளது என்பதே உண்மை என கூறியுள்ளார்.
இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரையிலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட எண்ணெய் குழாய்கள் வழியே வரும் எரிபொருளின் இயக்க திறனை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து என்.ஐ.டி.யின் 2 ஆசிரியர்கள் இதற்கு முன்பே ஆய்வு செய்து உள்ளனர்.
அதனுடன், மற்றொரு திட்டத்தின்படி, சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிட்டு, பருவகால நிலையை முன்கூட்டியே அறிவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதனை தவிர்த்து புதிய சூப்பர் கம்ப்யுயூட்டர் உதவியுடன் மாணவர்களும் சில திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, சுற்றுலாவாசிகளுக்கான சாலையின் நிலை குறித்த உடனடி தகவல் அளிக்கும் முறை கொண்ட அப்ளிகேசன் ஒன்றை உருவாக்குதல் போன்றவை இந்த திட்டங்களில் அடங்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.