Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

மோசில்லாவின் புதிய 'பிரவுசர்'


மோசில்லா நிறுவனம், பயனாளர்களுக்கு உதவும் வகையில் அதிவேகமாக செயல்படும் இணைய உலாவியை (பிரவுசர்) அறிமுகம் செய்ய இருக்கிறது.

உலகின் முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான 'பயர்பாக்ஸ்' உலாவியை அறிமுகம் செய்த மோசில்லா நிறுவனம் தற்போது 'மோசில்லா சர்வோ'  (Mozilla Servo)   எனும் அதிவேகமாக செயல்படக்கூடிய மற்றொரு இணைய உலாவியை அறிமுகம் செய்யவிருக்கிறது.

இந்தப் புதிய உலாவியை சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து மோசில்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

'ரஸ்ட்'   (Rust)   எனப்படும் புதிய கணினி மொழியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த உலாவி, வருகிற ஜூன் மாதம் சோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

புதிய இணைய உலாவி,    64bit Linux, 64bit OSX, Android     மற்றும்   Gonk (Firefox OS)   ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படக்கூடியதாக இருக்கும் என்றும், இது பயனாளர்களுக்கு இணைய தேடலில் புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் மோசில்லா நிறுவனம் கூறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.