பஞ்சாப் மாநிலத்தில் 7 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரின் கையை பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை வெட்டி எறிந்துவிட்டார்.
பாதிண்டா மாவட்டத்தின் கோட்லி அப்லு கிராமத்தை சேர்ந்த பார்மிந்தர் சிங் என்ற வாலிபர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமை விசாரணைக்காக சிறுமியின் தந்தை பம்மா சிங் மற்றும் குற்றவாளி பார்மிந்தர் சிங் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று பம்மா சிங், பார்மிந்தர் சிங்கிடம் கேட்டுக் கொண்டு உள்ளார். பின்னர் பார்மிந்தர் சிங்கை மோட்டார் சைக்களில் அழைத்து சென்று உள்ளார்.
ஜுகும்பா கிராமத்தை அடைந்ததும் பார்மிந்தர் சிங்கை கீழே இறங்க கூறிய பம்மா சிங் அவரை மரத்தில் கட்டிஉள்ளார். தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தை எடுத்து பார்மிந்தர் சிங்கின் இரண்டு கைகளையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பார்மிந்தர் சிங்கை மீட்டு பாதிண்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பார்மிந்தர் சிங்கின் தலை மற்றும் உடல் பகுதியிலும் காயம் உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பம்மா சிங்கிற்கு எதிராக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக இருக்கும் பம்மா சிங்கை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.