Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

மது அருந்தி விட்டு பொது இடங்களில் தகராறு செய்யும் பெண்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரிப்பு


இங்கிலாந்தில் பொது இடங்களில்  மது அருந்தி விட்டு த்ககராரில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில்  பொது இடங்களில் மது அருந்துவிட்டு தகராறில் ஈடுபடும் பெண்கள் மீது 80 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் எனபோலீசார் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய 5 ஆண்டுகளில் போலீசார் பெண்களிடம் வசூலித்த அபராத தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த தகவலில், இங்கிலாந்து நாட்டிலேயே அதிகளவில் மது அருந்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நியூகேஸ்டில் நகரை சேர்ந்த பெண்கள் என தெரியவந்துள்ளது.

இந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4,629 பெண்களிடம் தலா 80 பவுண்ட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, இரண்டாவது இடத்தில் லன்ஹ்காசைர் நகரை சேர்ந்த 3,596 பெண்களிடமும், 3-வது இடத்தில் மெர்சிசைடு நகரை சேர்ந்த 3,410 பெண்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதே பட்டியலில், இங்கிலாந்து தலைநகரமான லண்டன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 5 ஆண்டுகளில் பிரித்தானிய நாடு முழுவதும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்ட 34,381 பெண்களிடம் 2.75 மில்லியன் பவுண்ட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.