Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

நில ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை ஐகோர்ட்டில், நீலாங்கரையை சேர்ந்த ஆர்.பொன்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை மாநகராட்சியின் 192–வது வார்டு பகுதியில் நீலாங்கரை குப்பம் என்ற எங்களுடைய கிராமம் உள்ளது. எங்கள் கிராமத்தில் 72 சதுர அடி நிலத்தில், சென்னை மாநகராட்சி சார்பில் டி.வி. மற்றும் ரேடியோ அறை கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கடந்த 2013–ம் ஆண்டு மாநகராட்சி தீர்மானம் இயற்றியது. அதன்படி அந்த கட்டிடம் இடிக்கப்பட்டன.

இதன்பின்னர், அந்த இடத்தை எங்கள் பகுதி கவுன்சிலர் எம்.சி.முனுசாமி ஆக்கிரமித்துக்கொண்டார். அதில், கார் நிறுத்தும் கட்டிடத்தை கட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு ஜூலை 7–ந்தேதி புகார் மனு அனுப்பினேன். இதுநாள் வரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது சென்னை மாநகராட்சி ஆணையர், நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தவேண்டும். பின்னர், சட்டப்படி தகுந்த நடவடிக்கையை ஒரு மாதத்துக்குள் எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளனர். கவுன்சிலர் எம்.சி.முனுசாமி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.