மதுரை பி.பி.குளத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது25). இவர் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா சென்றார். பகல் முழுவதும் பூங்கா, ஏரி, பைன்பாரஸ்ட், குணாகுகை, நீர்வீழ்ச்சி என பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இரவில் டால்பின்னோஸ் செல்லும் வழியில் உள்ள மவுன்டைன்பியூட்டி என்ற இடத்துக்கு சென்றனர். அது உயரமான மலை முகடுகளை கொண்ட அழகிய இடம். அதன் எழிலை கண்டுகளித்த அவர்கள் செல்போன்களில் படம் எடுத்தனர்.
கார்த்திக் ஒரு பாறை மீது ஏறி நின்றுகொண்டு செல்பி எடுத்தார். அப்போது தவறி 500 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்வதறியாது திகைத்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து பார்த்தனர். இரவு நேரம் என்பதால் பள்ளத்தில் விழுந்த கார்த்திக்கை தேட முடியவில்லை.
அவர் என்ன நிலையில் உள்ளார் என்றும் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் இன்று காலை அந்த பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்திக்கும், அவரது நண்பர்களும் அந்த சமயத்தில் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் செல்பி எடுக்கும்போது கார்த்திக் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதுபோன்ற ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், அவ்வாறு வைத்திருக்கும் இடங்களிலும் சிலர் விதிமுறைகளை மீறி நடக்கின்றனர். எனவே இதனை தடுக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.