கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் வெய்னி அல்லென் ஹண்ட்ஸ்மேன் ( வயது 39) சியாரா நெவாடா மலைப்பகுதிக்கு கடந்த2014ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சுற்றுலா சென்றுள்ளார். வனப்பகுதியில் ஜாலியாக மது அருந்திய அந்த ஹண்ட்ஸ்மேன் வித்தியசமாக ‘செல்பி’ வீடியோ ஒன்றை எடுக்க நினைத்து அருகில் உள்ள காய்ந்துபோன இலைகளுக்கு தீவைத்துள்ளார்.
தனக்கு பின்னால் தீப்பற்றி எரிய, அதனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார். ‘ஹலோ….
நான் இப்போது வனப்பகுதியில் இருக்கிறேன். என்னை சுற்றி தீப்பற்றி எரிகிறது தெரிகிறதா?’ என சிரித்துக் கொண்டு பேசியுள்ளார். ஆனால், இதற்கு பிறகு தான் நிலைமை விபரீதமாகியுள்ளது. பற்றி எரிந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியுள்ளது.
இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியுற்ற அந்த நபர் உடனடியாக 911 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு போலீருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். கவல் பெற்று வந்த போலீசார் மற்றும் 300 தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நாட்கள் கடுமையாக போராடிதீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், இந்த தீ விபத்தால் சுமார் 1,00,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. வனப்பகுதியில் அமைந்திருந்த 100 கட்டிடங்கள் சேதமானது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த விபத்தை தொடர்ந்து வீடியோ மூலம் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தொடக்கத்தில் இந்த தவறை செய்யவில்லை என குற்றவாளி கூறியுள்ளார்.ஆனால்,சில நாட்களுக்கு பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தது. லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதியை முற்றிலுமாக சேதப்படுத்திய குற்றத்திற்காகவும், கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 மில்லியன் டாலர் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
தனக்கு பின்னால் தீப்பற்றி எரிய, அதனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார். ‘ஹலோ….
நான் இப்போது வனப்பகுதியில் இருக்கிறேன். என்னை சுற்றி தீப்பற்றி எரிகிறது தெரிகிறதா?’ என சிரித்துக் கொண்டு பேசியுள்ளார். ஆனால், இதற்கு பிறகு தான் நிலைமை விபரீதமாகியுள்ளது. பற்றி எரிந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியுள்ளது.
இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியுற்ற அந்த நபர் உடனடியாக 911 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு போலீருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். கவல் பெற்று வந்த போலீசார் மற்றும் 300 தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நாட்கள் கடுமையாக போராடிதீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், இந்த தீ விபத்தால் சுமார் 1,00,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. வனப்பகுதியில் அமைந்திருந்த 100 கட்டிடங்கள் சேதமானது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த விபத்தை தொடர்ந்து வீடியோ மூலம் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தொடக்கத்தில் இந்த தவறை செய்யவில்லை என குற்றவாளி கூறியுள்ளார்.ஆனால்,சில நாட்களுக்கு பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.