அ.தி.மு.க. அரசை வீழ்த்த எனக்கு சக்தி கொடுங்கள் என்று சென்னையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசினார்.
கருணாநிதி தேர்தல் பிரசாரம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு கருணாநிதி புறப்பட்டார். அப்போது அவருக்கு தொண்டர்கள் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழி நெடுக சாலையின் இரு பக்கத்திலும் குவிந்திருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் சைதாப்பேட்டை-ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கருணாநிதி வந்தார். அப்போது தொண்டர்கள் ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர்.
தி.மு.க. வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), நடிகர் வாகை சந்திரசேகர் (வேளச்சேரி), தனசேகரன் (விருகம்பாக்கம்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்) ஆகியோரை அறிமுகம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் போட்டியிடுவதாக நினைத்து...
இந்த தேர்தலில் நான் இந்த தொகுதியிலே போட்டியிடுவதாக தான் நினைக்கிறேன். யார் போட்டியிட்டாலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டால் அவர்கள் அண்ணாவின் தம்பிகள். இந்த நாட்டு மக்களுக்காக அரும்பாடுபடுவார்கள். அந்த நம்பிக்கையில் உங்கள் வாக்குகளை நான் போட்டியிடுவதாக நினைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் எதிர்காலம் வளமானதாக மாற வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கூட்டம் உள்ளது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சிக்கு பரிகாரமாக நீங்கள் தரப்போகும் பரிசு வெற்றி என்ற நம்பிக்கையோடு ஒரு சில கருத்துகளை உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த நாட்டில் நடப்பது என்ன என்பது உங்களுக்கு தெரியும். எந்த காரணத்தினால் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள், இந்த நாட்டிலே ஆள்வதற்காக மக்களின் வாழ்வை சுரண்டி, மக்களை பற்றி கவலைப்படாமல் தங்களை பற்றியே கவலைப்படுகிறார்கள். தங்களுக்காகவே இந்த ஆட்சி இருக்கிறது என்று ஆணவம், அகபாவத்துடன் நடத்தும் தர்பாரில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை கூட பார்வையிட வராத முதல்-அமைச்சர் தான் நமக்கு கிடைத்து இருக்கிறார். அதை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை.
மற்ற எதிர்க்கட்சிகளும், நாமும் எடுத்துரைத்தும் கூட அவர்களுக்கு வெள்ள பாதிப்பு தெரியவில்லை. சென்னையில் வெள்ளம் வந்தால் தடுக்க முடியவில்லையே என்று நாங்கள் தவித்தோம். நம்முடைய கட்சி நிர்வாகிகளை அனுப்பினோம். மக்களை காப்பாற்றும் அளவுக்கு தமிழகத்திலே ஒரு செயல்படாத அரசு, மக்களை பற்றி கவலைப்படாத அரசு நடக்கிறது.
சில பேருக்காக ஆட்சி...
தி.மு.க. தோழர்கள், செயல்வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த புயல் வெள்ளத்தின்போது தமிழ்நாட்டிலேயே எந்த அளவுக்கு பணியாற்றினார்கள் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்தீர்கள். நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த முதல்-அமைச்சர் தூங்கிக்கொண்டிருந்தார். விழித்துக்கொள்ளவில்லை. விழித்துக்கொண்டிருந்த நாம் கவலையுடன் பரிதவித்த போது அவர்கள் உல்லாசமாக இருந்தார்கள். என்னை பொறுத்தவரையில் பக்கத்திலேயே உள்ள கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக பாடுபட்டோம். சுயநலத்திற்காக இதை நான் சொல்லவில்லை. பொது நலத்தில் இருப்பவர்கள் மக்களை பற்றி கவலைப்பட வேண்டும். மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு கிடையாது. தன் குடும்பத்தில் உள்ள சில பேருக்காக ஆட்சியை நடத்துகிறார்கள்.
மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இங்கு யாரும் இல்லை. அவர்களுடைய ஆட்சியால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோது 100-க்கு மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அந்த கொடுமைகளை ஏன் என்று கேட்கவில்லை. அத்தகை கொடுங்கோல் ஆட்சி தான் நடந்தது.
சக்தி கொடுங்கள்
அவர்களும் இன்று மக்களை சந்தித்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு வந்து இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் செம்பரம்பாக்கங்கள் உருவாகும். அதில் பிணங்கள் மிதக்கும். அந்த பிணங்கள் மிதக்கவா? அவர்களுக்கு மீண்டும் வாக்களித்து சிம்மாசனத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள். நாம் நமக்காக வாழவில்லை. நாட்டிற்காக வாழ்பவர்கள். அண்ணாவும், பெரியாரும் நாட்டிற்காக வாழ்ந்தார்கள். அவர்கள் ஆற்றிய பணியை நாம் தொடர வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ முறை வெள்ளம், புயல் வந்து இருக்கிறது. இந்த மகாராணி மட்டும் நான் வெளியே கிளம்ப மாட்டேன். ஹெலிகாப்டரில் தான் கிளம்புவேன் என்கிறார்.
மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கவலைப்படாத ஒரு மகாராணியின் ராஜியத்தை எவ்வளவு நாளைக்கு தான் அனுபவிப்பது. அதனால் தயவு செய்து, நான் கேட்பது நாடு வாழ, ஏதோச்சதிகாரம் அதிகாரத்தை எத்தனை நாளைக்கு அனுபவிப்பது நம்முடைய தோழர்கள், தம்பிமார்கள், தொண்டர்கள் அவ்வளவு பேரும் நாசக்கார ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும். உங்களுடைய பதற்றத்தை என்னால் உணர முடிகிறது. நான் சக்தி அற்றவனாக இருக்கிறேன். அந்த சக்தியை எனக்கு தாருங்கள். வரும் தேர்தலில் எனக்கு அதை நீங்கள் வழங்க வேண்டும். அந்த சக்தியை பயன்படுத்தி இன்றைக்கு நடைபெறும் சூழ்ச்சி ஆட்சியை விரட்டி அடிப்பேன். தி.மு.க. ஆட்சி அமையும் என்று நம்புகிறேன்.
மாற்றத்தை கொடுங்கள்
என் மகன் மு.க.ஸ்டாலின் ஊரெல்லாம் சுற்றி வருகிறார். அவர் கால்படாத இடம் இல்லை. அதெல்லாம் பயன்படாமலா போய் விடும். ஏழை, எளிய மக்களுக்கு விடிவு காலம் வராமலா போய் விடும். ஆட்சி இவர்களுக்கு மட்டும் தான் சொந்தமா? இவர்களுக்கு தான் பட்டா போட்டு வைத்திருக்கிறதா?. மாற்றம் வேண்டும். மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதை நீங்கள் உருவாக்க வேண்டும்.
மாற்றத்தை கேட்கும் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடாதீர்கள். ஏமாற்றம் என்றைக்கும் யாரையும் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் செய்யலாம். எனவே அந்த மாற்றத்தை கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும். உங்கள் அன்பான ஆதரவை எனக்கு அல்ல, இயக்கத்திற்கு வழங்கி, ஒற்றுமையை ஏற்படுத்தி, ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி, விட்டுக்கொடுத்து வெற்றி பெற வழி செய்ய வேண்டும். நாம் எல்லோரும் சகோதரர்கள். நமக்கு ஒரு தாழ்வு என்றால் அது நாட்டுக்கே தாழ்வு என்று காரியம் செய்ய வேண்டும். உங்களுக்கான ஆட்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்களுக்கான ஆட்சியை உருவாக்க நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, தயாகம் கவி மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மேடையில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, கவிஞர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி
கருணாநிதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதை கொண்டாடும் வகையில் தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அங்கிருந்த தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிரசாரத்தையொட்டி வழி நெடுக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தியம்மாளும் உடன் சென்றார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் மரக்காணம் புறப்பட்டு சென்றார். அங்கு வேனில் இருந்தபடி அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். மாலை 7 மணிக்கு புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறையில் வாக்கு சேகரிக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.