Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

கழிவறை கட்டாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் மற்றொரு மணமகனை திருமணம் செய்தார்


உத்தரபிரதேசம் மாநிலத்தில் மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது.

கான்பூரை சேர்ந்தவர் நேகா (வயது25). நேகாவிற்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இருவீட்டாரும் சேர்ந்து இம்முடிவை எடுத்தனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...

இதனைத் தொடர்ந்து நேகா அவருடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தினார்.

அனைத்து வீடுகளிலும் கட்டாயம் கழிவறை கட்ட வேண்டும் என்ற சுகாதாரத் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேகா எடுத்த முடிவினை பலதரப்பினர் வரவேற்றனர். நேகாவின் முடிவை பாராட்டிய தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பணியை தொடங்கியது. அதன்படி மற்றொரு மணமகனை பார்த்து அவருக்கு மிகப்பெரிய அளவில் திருமணத்தை செய்து வைத்து உள்ளது. புது மணமகனின் வீட்டில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேகா பேசுகையில், “வாலிபர் வீட்டில் கழிவறை கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தனர், ஆனால் கட்டவில்லை எனவே திருமணத்தை நிறுத்தினேன். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் விதமாக நாமும் நம்முடைய பணியை செய்ய வேண்டும். வீட்டில் கழிவறை கட்டவேண்டும் என்பது அடிப்படை வசதியாகும்.” என்று கூறிஉள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.