அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்குவதில் தீவிரமாக உள்ள டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், டெலாவரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்திய கால்சென்டர்களில் பணியாற்றுகிறவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு எப்படி பதில் அளித்து பேசுவார்கள் என்பதை பேசிக்காட்டி கிண்டல் செய்து, புதிய சர்ச்சையில் சிக்கினார்.
அதே நேரத்தில் இந்தியாவை உயர்த்தியும் அவர் கருத்து கூறினார்.
இதுபற்றி அவர்கூறும்போது,“இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. பிற தலைவர்களுடன் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ஆனால் நமது தலைவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்களே என்பதில்தான் வருத்தமாக உள்ளது” என கூறினார்.
மேலும், “சீனாவுடன் எனக்கு கோபம் இல்லை. ஜப்பானுடனும் கோபம் இல்லை. வியட்நாமுடனும் கோபம் இல்லை. இந்தியாவுடனும் கோபம் கிடையாது” என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் “சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியாவுக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கும் கொள்கைகளை ஏற்க முடியாது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை ஒரு குழந்தையின் கையில் இருந்து சாக்லேட்டை பறிப்பது போல பறித்து செல்வதை அனுமதிக்க முடியாது” எனவும் அவர் ஆவேசமாக கூறினார்.
“கோணலான லாரியை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.