Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை கிடைக்காத விரக்தியில்
சென்னை ஆயிரம் விளக்கை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ராம்குமார் (வயது22). இவர் கடந்த ஆண்டு சென்னை நந்தனம் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஆனால் அவரது படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.

இதனால் அவர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அந்த வேலையும் ராம்குமாருக்கு நிரந்தரமாக கிடைக்கவில்லை. இதனால் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் இருந்து வந்தார்.

பட்டதாரி வாலிபர் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்குமார் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவருடைய தாயார் சந்தனம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தன்னுடைய மகன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் கிடைத்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகை பறிப்பு
* மனைவி லதாவுடன் ஏற்பட்ட தகராறில் சூளைமேட்டை சேர்ந்த தொழிலாளி ரமேஷ்(28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* கொரட்டூரில் காமாட்சி(62) என்பவரது பெட்டிக்கடைக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து, அவரது 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

* அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(33) நேற்றுமுன்தினம் புழல் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.

* ராஜகீழ்ப்பாக்கம் பகுதியைசேர்ந்த ஹெப்சி பியூலா (35) நேற்று வேளச்சேரி சாலையில் பஸ் ஏற நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.

பெண் கைது
* அமைந்தகரையை சேர்ந்த மும்தாஜ் பேகம்(60) என்பவரிடம் தியாகராயநகரில் பணத்தை பறித்ததாக ஆந்திராவை சேர்ந்த சுசிலா(30) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

* தலைமைச்செயலக காலனி பகுதியில் 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் கொல்கத்தாவை சேர்ந்த பூபதிதாசை ரோந்து போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.