சென்னையில் இதுவரை தேர்தல் விதிமுறைமீறல் தொடர்பாக 124 புகார்கள் வந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
38 நாட்களில் 124 புகார்கள்
தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந்தேதி நடைபெற உள்ளது. சென்னையில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்து பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
1800–425–7012 என்ற கட்டணமில்லா உதவி எண் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை (நேற்று வரை) தொடங்கி 38 நாட்கள் ஆகின்றன. இதுவரை 124 புகார்கள் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வந்திருக்கின்றன.
சுவர் விளம்பரங்கள் நீக்குதல், வண்ண வாக்காளர் அடையாள அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றும் பலர் புகாராக தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் அதிகாரிகள், முறையான அனுமதி பெற்றிருந்தாலும், மக்கள் பார்வையிடும் இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
விளம்பரங்கள் ஒளிபரப்பு
தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. டி.வி.க்கள் மூலம் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மற்றும் இதர விளம்பரங்களில் தனி நபர் விமர்சனம் கூடாது என்று ஏற்கனவே மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த விளம்பரங்கள் எப்போது வரை இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படலாம்? என்பது குறித்து அலுவலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:–
48 மணி நேரத்துக்கு முன்பு...
தேர்தல் பிரசாரம் முடிவதில் இருந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை உள்ள இடைப்பட்ட 48 மணி நேரத்தில் தேர்தல் சம்பந்தப்பட்ட விவரங்களை எந்தவிதத்திலும் வேட்பாளர்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது. தேர்தல் விளம்பரங்கள் எதுவும் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பு செய்யப்படும் அரசியல் சார் விளம்பரங்கள், ஊடக கண்காணிப்பு மையம் மூலம் புகாராக பதிவு செய்யப்படும். பின்னர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.