Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

மராட்டிய மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் 5 பேர் கைது


மராட்டிய மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் பறிமுதல்
மராட்டிய மாநிலம் தானேயில் சமீபத்தில் ‘எபெட்ரைன்’ எனப்படும் போதைப்பொருட்களுடன் சுற்றித்திரிந்த சாகர் சுரேஷ் (வயது 28), மயூர் சுக்தரே(25) மற்றும் நைஜீரிய நாட்டுக்காரர் ஒருவர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், தனேஷ்வர் ராஜாராம்(28) என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.

அவரிடம் இருந்து 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சோலாப்பூரில் இயங்கி வரும் போதைப்பொருள் தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த போதைப்பொருட்களை அவர்கள் கொள்முதல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திர பிரசாத்தை(48) போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

ரூ.2 ஆயிரம் கோடி
அவரிடம் இருந்து முதற்கட்டமாக 7 ஆயிரத்து 600 கிலோ ‘எபெட்ரைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர், அந்த நிறுவனத்தின் குடோனில், அவர் பதுக்கி வைத்திருந்த 9 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர்.

கைதான 5 பேரிடம் இருந்தும் மொத்தம் 18 ஆயிரத்து 500 கிலோ ‘எபெட்ரைன்’ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி என்றும் தானே நகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.