Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

மதுரவாயலில் ‘வாக்கி–டாக்கி’ கோபுரத்தில் ஏறி சப்–இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல்


மதுரவாயலில் ‘வாக்கி–டாக்கி’ கோபுரத்தில் ஏறி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சப்–இன்ஸ்பெக்டர்
சென்னை மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அரிநாத் (வயது 49). திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இதற்குமுன்பு மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அரிநாத் காரில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ கார் மீது உரசியது. ஆத்திரம் அடைந்த அரிநாத், ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் புகார் செய்ததால், அரிநாத் திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் இருந்து அரிநாத் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் சுமார் 300 அடி உயரம் கொண்ட ‘வாக்கி – டாக்கி’ கோபுரம் உள்ளது.

‘வாக்கி–டாக்கி’ கோபுரத்தின் அருகில் சென்ற அரிநாத், திடீரென கோபுரத்தில் வேகமாக ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

2 மணி நேர போராட்டம்
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து, அரிநாத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்து விட்டார்.

இதனையடுத்து கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ‘வாக்கி–டாக்கி’ கோபுரத்தில் ஏறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அரிநாத் கீழே இறங்கி வந்தார்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அரிநாத் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:–

‘வாட்ஸ்–அப்’ விவகாரம்
ஆட்டோ டிரைவரை தாக்கியதால் அரிநாத் திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மதுரவாயல் பகுதியில் உள்ள கடைகளில் அரிநாத், பணம் கொடுக்காமல் பழங்கள் மற்றும் பொருட்கள் வாங்கி செல்வது போல் ‘வாட்ஸ்– அப்’பில் வீடியோ வெளியானது.

அதனை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள், அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், ‘வாக்கி–டாக்கி’ கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.